கூலிப்படைத்தலைவர் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் மானாமதுரை தொகுதியில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்குசேகரித்தார். இதையடுத்து கோவில்பட்டியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலினை கூலிப்படைத் தலைவன் என விமர்சித்தார். மேலும், சாதிக் பாஷாவின் மரணம் தொடர்பாக, சிபிஐ மூலமாக நடைபெறும் விசாரணையில் உண்மை வெளிப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post