இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட இந்தியாவில் இதுவரை குறைவான வெப்பநிலை இருந்துவந்த நிலையில், திடீரென வெப்பம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை தவிர, பல்வேறு இடங்களில், இன்றுமுதல், வரும் 4ம் தேதிவரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், தெற்கு கடலோர ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அனல்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிராவில் விதர்பா, மராத்வாடா ஆகிய இடங்களில் அனல்காற்றின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post