தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அனல் காற்று வீசும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் 5ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post