இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு முக்கிய புள்ளிகள் சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைத்துள்ள பணம் குறித்த தகவல்களை, அந்நாட்டு தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2016ஆம் ஆண்டை விட, தற்போது இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வரும்நிலையில், இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த நிதியமைச்சர் பியுஷ் கோயல், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த 2014ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை சுவிஸ் தேசிய வங்கியில் வைப்புத் தொகை 80 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துகள் 34 புள்ளி 5 சதவிகிதமாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் வெளியான அறிக்கை தவறாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
Discussion about this post