தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துக் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில், அடுத்த இரண்டு தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
Discussion about this post