பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்யை ஆதரித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பிரசாரம் செய்தார்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வேட்பு மனு தாக்கல் செய்ததலிருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் இவருடைய பிரசாரத்தின் போது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இவரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஏராளமான அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் சென்றனர். வாக்கு சேகரிப்பின் போது, வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷும், அவைத்தலைவர் மதுசூதனனும் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Discussion about this post