மதுரையில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண், பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Discussion about this post