சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, காரில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Discussion about this post