ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சேர்க்க வலியுறுத்தி வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன் மொழிந்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது இயக்கம் மற்றும் அதன் தலைவர் மசூத் அசாருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. எனினும் சீனா தொடர்ந்து மசூத் அசாருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில், பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில், மசூத் அசாருக்கு எதிராக ஆயுத தடை, பயண தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post