பொதுவாக, திமுக என்றாலே, பொய்களும், புரட்டுகளும் நிறைந்தது என்று அனைவருக்குமே தெரிந்ததுதான். பல சம்பவங்களின் மூலம் இவை வெளிவந்துள்ளது. தற்போது, கனிமொழி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணம் மூலம், மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அது என்ன? பார்ப்போம் வாருங்கள்….
நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். கருணாநிதியின் மகள் என்று அறியப்படும் கனிமொழியின் பிறப்பு சான்றிதழில், அப்பாவின் பெயர் மு.கருணாமூர்த்தி என்று உள்ளது. ஆனால், அவர் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரத்தில், கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை இப்போது எழுந்ததல்ல… 51 வருடங்களுக்கு முன்னரே எழுந்தது…
ஆம், கனிமொழி பிறந்த 1968ம் வருடம், அண்ணாவின் அமைச்சரவையில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் கருணாநிதி. அப்போது, பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த ராஜாத்தி அம்மாள் என்பவர், மருத்துவமனையில், குழந்தையின் தந்தை பெயர் மு. கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார் என்று செய்தி கசிய, ராஜாத்தி அம்மாள் யார் என்று சட்டப்பேரவையில், எதிர்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதனால் சலசலப்பு ஏற்பட்டவுடன், உண்மையை கூறும்படி அண்ணா கேட்டுக்கொண்டதையடுத்து, ராஜாத்தி அம்மாள், என் மகள் கனிமொழியின் தாய் என்று வித்தியாசமான பதிலை கூறினார் கருணாநிதி. அப்போதைக்கு அந்த சலசலப்பு ஓய்ந்தது.
1970ல் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில், அவரது ஆதரவாளராக இருந்து பின்னர், எதிரணிக்கு மாறிய எம்.கே.டி.சுப்ரமணியம், தனது ‘ஜவகரிசம்’ பத்திரிகையில், ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டார். அதில், ‘குறிப்பிட்ட நாளில், சென்னையில் ஒரு மருத்துவமனையில், குறிப்பிட்ட நேரத்தில் ராஜாத்தி என்ற பெண்ணுக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில், அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி..? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனால், சுப்பிரமணியம் மீது கோபமடைந்த கருணாநிதி, முதல்வர் பதவிக்கு களங்கம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் எம்.கே.டி.சுப்பிரமணியத்தால், அந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இப்படி, தனக்காக உழைத்தவரையே சிறைக்கு அனுப்பியவர் கருணாநிதி.
இப்படி, எந்தப் பெண் குழந்தையை தன் மகளே இல்லை என்று கூறி, அதுகுறித்து செய்தி வெளியிட்ட எம்.கே.டி. சுப்பிரமணியத்தை சிறையில் அடைத்தாரோ, எந்தப் பெண் குழந்தையை பற்றி வெளியில் சொன்னால், தன் பெயருக்கு களங்கம் என்று மூடி மறைத்தாரோ, அதே பெண் குழந்தையான கனிமொழி… 2ஜி வழக்கில் தண்டனை பெற்று, டெல்லி திகார் சிறையில் இருந்தபோது, அங்கு சென்று சந்தித்து கண்ணீர் விட்டார் கருணாநிதி. இப்படி, நேரம், காலத்திற்கு ஏற்றார்போல் தங்களை மாற்றிக்கொள்ளும் கொள்கையை கடைபிடிப்பவர்கள்தான் இந்த திமுகவினர். இதை, மக்களும் பார்த்து, சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்…
Discussion about this post