மக்களவை தேர்தலையொட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களவை தேர்தலில் தேனி தொகுதி முதன்மையாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Discussion about this post