வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்க தக்க கோயில் கட்டட கலைகள், மனதை வசீகரிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் என பாரம்பரியமிக்க இடங்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உள்நாடு மற்றும் பன்னாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு தமிழகம் ஈர்த்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கடந்தாண்டு மட்டும் 34 கோடியே 50 லட்சம் ரூபாய் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 48 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கடிதத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்
Discussion about this post