தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன், தற்பொழுது சூரியன் மறைந்து, தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.
Discussion about this post