மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், இன்று அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள், மே 23ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களில், தமிழகத்தில், மக்களவை தொகுதிக்கு 254 பேரும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 72 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், இன்று அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த, 33 கோடிக்கு ரூபாய்க்கு அழியாத மை வாங்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post