தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சந்தீப் நந்தூரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Discussion about this post