இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோசுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பின் மூலம் இந்திய லோக்பால் அமைப்பின் முதல் தலைவர் என்ற பெருமையை பினாகி சந்திரகோஸ் பெற்றுள்ளார். பினாகி சந்திரகோசுடன், 4 நீதிபதிகள் உள்பட 8 உறுப்பினர்கள் லோக்பாலில் இடம் பெற்றுள்ளனர்.
Discussion about this post