40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அதிமுக கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் அறிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திருப்பூரை சிங்கப்பூராக மாற்ற வேண்டியதே நமது அரசின் நோக்கம் என்றார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள நலத்திட்டங்களால் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.
Discussion about this post