பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூற முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சீனிவாசன், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூற முடியாது என்றும், ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி எனவும் கடுமையாக சாடினார்.
Discussion about this post