காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்கிறார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை அவர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்குச் செல்கிறார். அங்கிருந்து சேலம் செல்லும் அவர், நாளை காலை மேட்டூர் அணைக்குச் சென்று, அணைகளில் மலர்களை தூவி தண்ணீரை திறந்து விடுகிறார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Discussion about this post