மக்களவை தேர்தலில் அதிமுக 40 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 18 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டார். சாத்தூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் மற்றும் விருதுநகர் தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம் செய்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி தொண்டர்கள் வீதி விதியாக சென்று வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தனர்.
Discussion about this post