வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை காண்பிக்க வேண்டும் என்றும் ஆதார் கார்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்டவைகளையும் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையம் ஆவணமாக குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், புகைப்பட சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post