அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல சட்டப்பேரவைத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது மேற்கொள்ளக்கூடிய செலவுகளை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கான விலை பட்டியல் தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது. மட்டன் பிரியாணி 200 ரூபாய் என்றும் சிக்கன் பிரியாணி 180 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல காலை உணவிற்கு 100 ரூபாய் என்றும் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என்றும் தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது.
Discussion about this post