சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து குழுவமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு குடிநீர் கட்டுபாட்டு வாரியம், வன பாதுகாப்பு துறை அதிகாரி மற்றும் மனுதாரர் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து, சதுரகிரி மலையில் குடிநீர் குழாய் அமைப்பது குறித்து களஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் வழக்கினை மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சதுரகிரி கோவிலுக்கு அறநிலைய துறை சார்பில் அடிப்படை தேவைகளுக்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post