மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டனர்.
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையை தயாரித்தது. இந்தநிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்படி வறுகை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
காவிரி -கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
Discussion about this post