ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 34வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு 5 சதவீதமும் குறைந்த விலை வீடுகளுக்கு 1 சதவீதமும் என்று ஜி.எஸ்.டி.யாக நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய வரி விகிதங்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன் அமலாக்கம் தொடர்பான அம்சங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்றைய கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படவோ அல்லது அறிவிக்கப்படவோ வாய்ப்பில்லை.
Discussion about this post