அ.தி.மு.க. மக்களவை தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியாக உள்ளது.
அதிமுக கூட்டணியில், தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து, வேட்பாளர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள, கட்சித்தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தின் முன்பு தேர்தல் அறிக்கையை வைத்து துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் ஆகியோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளனர்.
மக்களவை தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த அறிவிப்புகள் பெரும்பாலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post