கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்
கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று மாலை பாரிக்கர் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
இதையடுத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடந்த அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் கோவா சாபநாயகராக இருக்கும் பிரமோத் சாவந்த் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பிரமோத் சவந்த்க்கு வயது 45 என்பதுகுறிப்பிடத்தக்கது. இதற்கு பாஜகவின் கூட்டணிக்கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியும், கோவா பார்வர்டு கட்சியும் ஆதரவளித்தன.
ஆகையால், 40 பேர்கொண்ட கோவா சட்டப்பேரவையில், 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அதிகாலை 2 மணியளவில் பிரமோத் சாவந்த் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு கோவாமாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின், அவருடன் சில அமைச்சர்களும் புதிதாக பதவியேற்றுக்கொண்டனர்.
Discussion about this post