வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தொலை தூர சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தொலை தூர சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரை தெற்கில் 101 டிகிரி செல்சியசும், சேலத்தில் 98 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion about this post