கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று காலமானார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கார் கடந்த வருடம் முதல் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பிய அவர், மூக்கில் டியூப்புடன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் பாரிக்கரின் உடல் நிலை இன்று மீண்டும் மோசமடைந்தது என முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் காலமானார்.
Discussion about this post