மக்களவை தேர்தலை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள் உட்பட 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றில் சோதனை நடத்தியபொது, 28 லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் மற்றும் மலேசியா கரன்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட இந்த கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று, திருவாடானை கைகாட்டி அருகே சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய், 14 மடிக் கணிணிகள் மற்றும் 120 கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கீழக்கரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் 4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Discussion about this post