கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் தொடருவார் என அம்மாநில துணை சபாநாயகரான மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்
பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான மனோகர் பாரிக்கர், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். சமீபகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவரின் உடல்நிலையை சுட்டிக் காட்டி காங்கிரஸ் அவ்வபோது ஆட்சியமைக்க உரிமை கோரியது. இதனிடையே பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கோவா துணை முதலமைச்சருமான பிரான்சிஸ் மரணமடைந்ததால் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க கோவா ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த கோவா சட்டமன்ற துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, தற்போது முதலமைச்சராக இருக்கும் பாரிக்கரை மாற்றுவதற்கு கட்சியினர் யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்தார். விரைவில் அவர் பூரண குணமடைந்து திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
Discussion about this post