மாநகராட்சிகள் மீதான திமுகவின் அச்சம் அதன் தொகுதிப் பட்டியலிலும் வெளிப்படுகிறது. தமிழகத்தில் தற்போது உள்ள 14 மாநகராட்சிகளில் 7 மாநகராட்சிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகின்றது. 7 மாநகராட்சிகளை அப்படியே தூக்கி கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்து உள்ளது. மாநகராட்சிகள் ஒரு காலத்தில் திமுகவின் கோட்டைகளாக இருந்தன. ஆனால் சமீப காலமாக மாநகராட்சிகளில் திமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்தே வருகின்றது.
ஒரு காலத்தில் நகரங்களின் கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பற்றியே திமுக தொடர்ந்து பேசி வந்த நிலையில், மாநகராட்சிகளில் தங்கள் செல்வாக்குகள் சரிந்ததை அறிந்த பின்னர்தான், திமுக தலைவர் ஸ்டாலின் புதிய கட்சியான ‘மக்கள் நீதிமைய’த்தின் திட்டங்களை அப்படியே காப்பி அடித்து கிராமங்கள் பக்கம் சுற்றத் தொடங்கினார்.
அதனால் தான் மொத்தமுள்ள 14 மாநகராட்சிகளில் வெறும் 7 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது திமுக. இதில் இருந்தே நகர்ப்பகுதி மக்கள் வாக்கு தங்களுக்கு இல்லை என்று முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதை காட்டுவதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மக்களவைத் தேர்தலில் தனது கூட்டணிக் கட்சிகளை வைத்து மாநகராட்சிகளின் வாக்காளர்களைச் சந்தித்து, பின்னர் உள்ளாட்சித் தேர்தலின் போது மக்களின் கோபம் குறைந்த பின்னர் செல்லலாம் என்பது திமுகவின் திட்டம். இதனை அரசியல் வல்லுநர்கள் ‘குரங்கு தன் குட்டியை வைத்து ஆழம் பார்ப்பது போல, திமுக கூட்டணிக் கட்சிகளை வைத்து மாநகராட்சிகளில் ஆழம் பார்க்கின்றது’ – என்கின்றனர். திமுகவின் உத்தியைக் கண்டு அதன் கூட்டணிக் கட்சிகள்தான் கலக்கத்தில் உள்ளனர்.
Discussion about this post