மதுரையில் எம்.பி.தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணிநேரம் நீடிக்கவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மதுரை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. அரசியல் கட்சிகளும், கூட்டணி அமைப்பது, பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், மக்களவை தேர்தல் நடைபெறும் நாளன்று மதுரையில், சித்திரை தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது. இதனால், மதுரையில் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீடிக்கவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மதுரையில் 7 வாக்குச்சாவடி மையங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணிநேரம் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளார்.
Discussion about this post