சி.விஜில் செல்போன் செயலிமூலம் தேர்தல் விதிமீறல்களை வீடியோவாகவோ, புகைப்படமாகவோ அனுப்பினால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சி.விஜில் செல்போன் செயலிமூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் குழு ஆகியோருக்கான செயல் விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 18 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சி.விஜில் மூலம் வரும் புகார்களை 100 நிமிடங்களுக்குள் நிவர்த்தி செய்து, புகார் அனுப்பியவர்களுக்கு பதில் அனுப்பப்படும் என்று தெரிவித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, வாக்காளர்கள் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
Discussion about this post