கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இளைஞரை வெட்டிக்கொன்று குளத்தில் வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி அடுத்துள்ள ஆளூர் குளத்தில் இருபது வயது மதிக்க தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் கிடந்த அந்த வாலிபரின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் இரணியல் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்பவரது மகன் நவீன் என்பதும், இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரிய வந்தது. தனது பாட்டியின் அரவணைப்பில் இருந்து வந்த நவீன் மது அருந்தி விட்டு நண்பர்களுடன் தகராரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நவீன் கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்
Discussion about this post