நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 22 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். நாடுகாணி, பாட்டவயல் ஆகிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கேரளாவிற்கு சென்ற வாகனத்தில் கணக்கில் வராத 22 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருந்தது.இதையடுத்த்ய் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைபற்றப்பட்ட பணம் கூடலூர் கோட்டாட்சியர் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவனத்தை கொடுத்து விட்டு தங்களது பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post