அணை பாதுகாப்பு மசோதா உள்பட 18 மசோதாக்களை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோரின் தண்டனையை அதிகப்படுத்துவது, தனியார் நிதி நிறுவன முறைகேடுகளை தடுப்பது, மனித உரிமை ஆணையத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் என்பன உள்பட 18 மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக அரசின் தற்போதைய ஆட்சி காலத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இது என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தநிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்த்து குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post