பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை நேற்று இரவு முதல் பாதிக்கப்பட்டது. காலை முதல் நன்றாக இயங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வேகம் படிப்படியாக குறைந்தது. முதலில் இணையதள வேகம் குறைவாக உள்ளது என கருதப்பட்டது. ஆனால் பல்வேறுப்பகுதிகளில் இதன் சேவை முற்றிலும் முடங்கியதை தொடர்ந்து, பாதிப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய புகார்களை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
பராகுவே, இந்தியா, வங்க தேசம், அர்ஜென்டினா போன்ற நாடுகளில்தான் இதன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. ஆனால் பின்னர் தான் உலக அளவில் இதே நிலை நிலவியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் தங்களுடைய வெளியிட்டுள்ளது. டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் குடும்பத்தின் செயலிகளை உபயோகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதன் பாதிப்பை சரி செய்ய விரைவாக நாங்கள் முயன்று வருகிறோம். ஆனால், இந்தப் பிரச்னை சர்வர் தொடர்பான DDoS தாக்குதல் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் இன்ஸ்டாகிராமின் பாதிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனுடைய சேவை பாதிப்பும் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு வாட்ஸ்அப் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த செயலிகளை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக இந்த பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post