கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை அடுத்த தளி வட்டார வளர்ச்சி அலுவலகம்அருகே புளியமரத்தில், புளியை பறிக்கும் பணியில் தொட்டமஞ்சு கிராமத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர், அப்போது மலைத்தேனீக்கள் திடீரென அவர்களை கொட்ட தொடங்கியது. இதில் சாலையில் சென்றுகொண்டிருந்த ராஜன்னா என்பவரையும் தேனீக்கள் கொட்டியது. தேனீக்கள் கொட்டியதால் முகம்,கை கால், உடல் வீங்கி படுகாயமடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் காயமுற்ற ராஜன்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
Discussion about this post