ஹெட்போன் உபயோகிக்காமல் ஒருநாளில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணலாம். நாள் முழுவதும் அதனை காதிலேயே மாட்டிக்கொண்டும் சுற்றுபவர்களை பார்த்திருப்போம்.
தைவான் நாட்டில் அப்படி ஹெட்போன் மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் பாட்டு கேட்ட மாணவனின் காது செவிடாகி போன நிகழ்வு நடந்துள்ளது. ஒருநாள் இரவு தூங்கும் போது காதில் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியிருக்கிறார். அந்த ஹெட்போனின் இருபக்கமும் நன்றாகவே பாட்டு கேட்டுள்ளது. ஆனால் மறுநாள் காலை எழுந்த போது அவருக்கு ஒரு பக்கம் காது கேட்கவில்லை. உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த போது, அவர் ஹெட்போனில் அதிக சத்தத்தில் தொடர்ந்து பல மணி நேரம் பாட்டு கேட்டதால் அவரது காதில் பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.
அவர் இரண்டு காதிலும் ஹெட்போன் மாட்டியிருக்கிறார். ஆனால் அவர் தூங்கி கொண்டிருக்கும் போது ஒரு காதில் உள்ள ஹெட்போன் கழண்டு விழுந்துள்ளது. அதனால் அவருக்கு ஒரு காதில் பாதிப்பில்லை. கேட்காமல் போன அந்த காதில் மட்டுமே பாதிப்பு பயங்கரமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவர் சிகிச்சையில் உள்ளார்.
அந்த மாணவனின் நிலைமை நாளை உங்களுக்கும் வரலாம். அதிக நேரம் ஹெட்போன் உபயோகிப்பதை தவிருங்கள்.
Discussion about this post