பசுமையான பள்ளத்தாக்குகள், வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் ஆகியவை சூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக காட்சியளிக்கும் ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரம் சிம்லா .சுற்றுலாத் துறையை முக்கிய வருவாயாகக் கொண்டுள்ள ஹிமாச்சல் பிரதேசம் ஆகும்.
இயற்கை எழில் கொஞ்சும் ஹிமாச்சல பிரதேசம் கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ளது.
யூனியன் பிரதேசமாக இருந்த ஹிமாச்சல் பிரதேசம் 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு 12 மாவட்டங்களைக் கொண்ட தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.ஹிமாச்சல் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி ஹிந்தியாக இருந்தாலும் , அதிகம் பேசப்படுவது பஹாமி எனும் மொழியாகும்.
இம்மாநிலத்தின் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 90 ஆயிரத்து 117 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 84 ஆயிரத்து 68 ஆகும். ஆக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 74 ஆயிரத்து 187 ஆகும்.
ஹிமாச்சல்பிரதேசத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை, கங்க்ரா, மண்டி, ஹமிர்பூர் மற்றும் ஷிம்லா (தனி)யாகும்
1985 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மாறி மாறி முதல்வர் பதவியை தக்கவைத்து வருகின்றன. 1990, 1998, 2007,2014: பா.ஜ.க; 1985, 1993, 2003, 2012: காங்கிரஸ்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரதீபா சிங்கும் பாஜக சார்பில் ராம் ஸ்வரூப் சர்மா போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றது. கங்க்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சந்தர் குமாரும் பாஜக சார்பில் சாந்த குமாரும் போட்டியிட்டதில் பாஜக வெற்றி பெற்றது. அதேபோல் ஹமீர்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரஜிந்தர் சிங்கும் பாஜக சார்பில் அனுராக் தாக்குரும் போட்டியிட்டதில் பாஜக வெற்றி பெற்றது. ஷிம்லா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோகன் லால் ப்ரக்தாவும் பாஜக சார்பில் வீரேந்திர காஷ்யப் போட்டியிட்டதில் பாஜக வெற்றி பெற்றது. மற்றொரு தொகுதியான சுஜன்பூரில் பாஜகவைச் சேர்ந்த நரேந்திர தாக்குர் வெற்றிபெற்றார்.
இம்மாநில வாக்கு சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு அதிகரித்து வருகின்றன. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 56.78 சதவீத வாக்குகள் பெறப்பட்டன. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 59.71 சதவீத வாக்குகளும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 58.41 சதவீத வாக்குகள் பெறப்பட்டன. இறுதியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 64.45 சதவீத வாக்குகள் பதிவாகின.
காங்கிரஸூம் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவிற்கு பிறகு எந்த கட்சி ஹிமாச்சல் பிரதேசத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தப் போகிறது என்பது தெரியவரும்.
Discussion about this post