தண்ணீரிலும், தரையிலும், செல்லக்கூடிய இந்திய கடற்படையின் ரோந்து படகை கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
இந்திய கப்பல் படைக்கு சொந்தமான தரையிலும் தண்ணிரிலும் அதிவேகமாக செல்லக் கூடிய ஏர் குஷன் கிராப்ட் ரோந்து படகு, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்தது. கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 8ம் தேதி கடலூர் வழியாக சென்னைக்கு சென்ற இந்திய கடற்படையின் ரோந்து படகு, ராமேஸ்வரம் செல்வதற்கு கடலூர் மார்க்கமாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்தது. மணிக்கு 35 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரோந்து படகை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
Discussion about this post