போடிநாயக்கனூரில் உள்ள வஉசி. சிலை அகற்றப்பட்டு, புதிய வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், சண்முக சுந்தரபுரம் மகாஜன சங்க திருமண மண்ட திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவ்விழாவின் போது, போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழைய வஉசி சிலையை அகற்றி, வெண்கலத்தினாலான புதிய சிலையை அமைத்து தர பொதுமக்கள், துணை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, விழாவில் பேசிய அவர், இது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற்று, வெண்கல சிலை அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
Discussion about this post