சித்திரை திருவிழா நாளில் மதுரை மக்களவை தொகுதியில் தேர்தலை நடத்த கூடுதலாக 3700 காவல்துறையினர் தேவை என தமிழக காவல்துறை தலைவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதியன்று மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் சித்திரை திருவிழா தொடர்பாக காவல்துறை தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சித்திரை திருவிழா நாளில் மதுரை மக்களவை தொகுதியில் தேர்தலை நடத்த கூடுதலாக 3700 காவல்துறையினர் தேவை என்றும், மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 12 ஆயிரம் காவலர்கள் தேர்தல் மற்றும் சித்திரை திருவிழா பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post