ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அது தொடர்பான நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க மத்திய தொழில்நுட்ப மற்றும் சட்டத்துறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால் இதுவரை நீக்கப்படவில்லை என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு ஆகும். இதனால் தொழில்நுட்ப சட்டத்தின் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்வீட்டர் நிறுவனம் தொடர்ந்து மெத்தனம் காட்டினால் தொழில்நுட்ப சட்டம் 69A விதியின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இதேபோல் பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post