பொள்ளாச்சியில் நடந்தேறிய பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூலில் பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சதீஷ், சுனில், வசந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளநிலையில், சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post