மதுரை மாவட்டத்தில் சித்திரை திருநாளன்று மக்களவை தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இரண்டும் ஒரே நாளில் நடைபெறுவதால், பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்றும், கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Discussion about this post