கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 285 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மக்களவை தேர்தல், அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 1855 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் இதில் கடந்த தேர்தலை காட்டிலும் 5 வாக்குப்பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பதற்றமானவை என 285 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கே அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பிரபாகர் தெரிவித்தார்.
Discussion about this post