எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் படிப்புக்காக நிதி திரட்டும் வகையில் சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், சிறியவர்கள், பெரியவர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர். 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தனியார் தொண்டு நிறுவனங்களிடம் நிதி திரட்டப்பட்டது.
Discussion about this post