பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயல்பட்டது தவறு என்பதை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணர்ந்து விட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக இலங்கையில் உள்ள கண்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிபர் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன பொருத்தவரை மற்றவர்களுடன் கூட்டணி வைத்ததை மிக தாமதமாகவே உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். எனவேதான் ஆட்சி மாற்றத்தினை கொண்டு வர அவர் முயற்சித்த விவகாரம் தோல்வியடைந்தாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசியல் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,இதற்கு ஆட்சியாளர்களே காரணம் எனவும் அவர் கூறினார். இலங்கையின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருவதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.
Discussion about this post